மும்பை குடிசை பகுதியில் தீ விபத்து: சிலம்டாக் மில்லினர் குழந்தை நடிகை வீடு சாம்பல்

| [ திரும்பி செல்ல ]

மும்பை, மார்ச். 5- ஆஸ்கார் விருது பெற்ற சிலம்டாக் மில்லினர் படத்தில் மும்பை குடிசை பகுதியை சேர்ந்த ரூபினா குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சிறு வயது லத்திகாவாக அவர் நடித்து இருந்தார். அவருடைய வீடு மும்பை பாந்த்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசை பகுதியில் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பாந்த்ரா குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் ரூபினா வீடு உள்பட ஏராளமான வீடுகள் சாம்பலாகி விட்டன. இதில் சிக்கி 9 பேர் காயம் அடைந்தனர். தீ விபத்து குறித்து ரூபினா கூறியதாவது:- தீ விபத்து நடந்தபோது நான் வீட்டில்தான் இருந்தேன். விபத்து ஏற்பட்டதும் தப்பி விட்டோம். சினிமாவில் எனக்கு கிடைத்த விருதுகள் எல்லாம் எரிந்து நாசமாகி விட்டன. இதுவரை யாரும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.