மஞ்சள் காமாலை நோய்; கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேமானந்தா அனுமதி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கடலூர், பிப்.10- சிறையில் பிரேமானந்தாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்த போது பிரேமானந்தாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது தெரிய வந்ததுள்ளது. உடனடியாக பிரேமானந்தா கடலூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். திருச்சியை அடுத்த விராலிமலையில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா சாமியாருக்கு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வந்த பிரேமானந்தா, இருதயம் மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டார். கடலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனை யில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமானந்தாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்த போது பிரேமானந்தாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. உடனடியாக பிரேமானந்தா கடலூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.