திருட்டு போன செல்போனை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் கார்டு \'செல் ஸ்னைப்பர்\' அறிமுகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை மார்ச்;8- செல்போன் திருட்டு போய்விட்டதா? அல்லது தொலைந்துவிட்டத? இனி கவலையை விடுங்கள்! அந்த செல்போனை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் கார்டு இப்போது வந்துவிட்டது. இந்த அரிய சாதனத்தை புகழ் பெற்ற NSS துர்கா கிரியேஷன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. விலை மதிப்புள்ள செல்போன்கள் தவற அல்லது திருட்டு போகும்போது பொருள் இழ்ப்பு மட்டுமின்றி சிம்கார்டில் பதிந்து வைத்துள்ள ஏராளமான போன் எண்கள் மற்றும் ஏ.டிஎம் ரகசிய குறியீட்டு எண், ஈ.மெயில் விபரம், மற்றும் முக்கிய படங்கள் எல்லாம் நம்மை விட்டு போவதோடு மட்டுமல்லாமல் நமது வியாபாரம் மற்றும் சொந்த ரகசியங்கள் திருடியவரின் கைக்கு சென்று அதனால் மிகப்பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும். இந்த தொல்லைகளையெல்லாம் போக்க அரிய கண்டுபிடிப்பான புதிய மொபைல் கார்டு \'செல் ஸ்னைப்பர்\' முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. இது ஒரு மென்பொருள் இதை நமது செல்போனில் பொருத்திக்கொண்டால் செல்போன் திருட்டு போனால் அதை கண்டுபிடிப்பதுடன் அதில் உள்ள தகவல்கள் யாரிடமும் செல்லாமல் தடுக்க முடியும். இது ஒரு ஆன்டி தெப்ட் மொபைகார்டு ஆகும். தொலைந்து போன ஹேண்ட் செட்டிற்கு வேறு போனிலிருந்து ஒரு \'ஸ்னைப்பர்\' பாஸ் வேர்டை எஸ்.எம்.எஸ். அனுப்பியே அதை லாக் செய்து யாருமே பயன்படுத்த முடியாத படி செய்ய முடியும். மேலும் தொலைந்து போன செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியே நீக்கி விட முடியும். இந்த தகவல்களை NSS துர்கா கிரியேஷன் பத்திரிக்கை தொடர்பாளர் பா. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.