ஆ.ராசா, ஷாகித் பால்வா இருவருக்கு மேலும் நான்கு நாட்கள் காவல் நீடிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, பிப். 10- இன்று ஆ.ராசா ஷாகித் பாவ்லா இருவரும் மீண்டும் நீதிபதி சாய்னி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவடையாததால் மேலும் நான்கு நாட்களை சி.பி.ஐ கேட்டது. இதனை நீதிபதி சாய்னி ஏற்றுக்கொண்டு நான்கு நாட்கள் விசாரணைக்கு அனுமத்தித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 22 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு எற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. இது குறித்து நடந்த விசாரணையில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆ.ராசா பாட்டீயாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஒ.பி. சாய்னி முன் ஆஜர் படுத்தப்பட்டார். ஆ.ராசாவுடன் இரண்டு தொலைத்தொடர்பு செயலாளர்களும் கைது செய்யப்பட்டு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மூவரையும் விசாரிக்க நான்கு நாட்களை நீதிபதி அனுமதித்தார். நான்கு நாட்களுக்கு பின் நீதிபதி முன் மூவரும் மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது ஆ.ராசாவை மட்டும் விசாரிக்க மேலும் நான்கு நாட்களை சி.பி.ஐ. கேட்டது. நான்கு நாட்களை தர மறுத்த நீதிபதி இரண்டு நாட்களை மட்டும் வழங்கினார். இதன் மூலம் பிப்ரவரி 8-ந்தேதி ராசா மீண்டும் காவலில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு செயலாளர்களும் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ஸ்வான் தொலைத்தொடர்புத் நிறுவன அதிபர் ஷாகித் பால்வாவும் கைது செய்யப்பட்டனர். இன்று ஆ.ராசா ஷாகித் பாவ்லா இருவரும் மீண்டும் நீதிபதி சாய்னி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவடையாததால் மேலும் நான்கு நாட்களை சி.பி.ஐ கேட்டது. இதனை சாய்னி ஏற்றுக்கொண்டு நான்கு நாட்கள் விசாரணைக்கு அனுமத்தித்தார். இதன் பின் ஆ.ராசா ஷாகித் பாவ்லா மீண்டும் காவலில் அடைக்கப்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து அனைத்து விசாரணைகளையும் மே 31-ந்தேதிக்குள் முடித்துவிடுவோம் என சி.பி.ஐ. அறிவித்துள்ளது. 2001 முதல் 2009 வரை நடைபெற்ற 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்தவை அனைத்தையும் ஆவணங்களாக சி.பி.ஐ. வைத்துள்ளது. மேலும், சிலவற்றை மட்டுமே கண்டறிய வேன்டியுள்ளதாகவும் சி.பி.ஐ. அறிவித்துள்ளது. இதனிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்த அனைத்து உத்தரவையும் வழங்க உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.