ஹசன்அலி கறுப்பு பண புகாரில் என்னை தொடர்பு படுத்துவதா? பத்திரிக்கைகள் - டி.வி.க்கு ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.7- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் மனோஜ்பாண்டியன் எம்.பி. மூலம் ?மிட்டே? ஆங்கில பத்திரிகை மற்றும் முரசொலி, கலைஞர் டி.வி., போன்றவற்றுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஹசன் அலி விவகாரத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்திகள் வந்துள்ளன. ஹசன் அலியின் பல்லாயிரம் கோடி வரிஏய்பில் தென்னிந்திய பெண் முதல்-மந்திரி சம்பந்தப்பட்டுள்ளார் என்று ?மிட்டே? பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதை முரசொலி பத்திரிகை சுவிஸ் வங்கியில் தொழில் அதிபர் ஹசன்அலிகான் பதுக்கி வைத்துள்ள ரூ.35 ஆயிரம் கோடி கறுப்பு பணம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என செய்தியாக்கி வெளியிட்டுள்ளது. கலைஞர் டி.வி.யிலும் இச்செய்தி ஒளிபரப்பப்பட்டு உள்ளது. இந்த செய்தி அவதூறானது. உண்மைக்கு புறம் பானது. ஜெயலலிதாவுக்கும், ஹசன்அலிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா பெயரை இதில் இணைத்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பாங்கிகளில் கறுப்புபணத்தை பதுக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். அப்படிப்பட்டவர் இச்செய்தி மூலம் களங்கப்படுத்தப்பட்டு உள்ளார். இச்செய்தியை வெளியிட்டமைக்காக ஜெயலலிதாவிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளது.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.