முடக்கப்பட்ட இ-டிக்கட் முன்பதிவு சேவையை மீண்டும் தொடர ஏஜண்டுகள் கோரிக்கை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்;8- முடக்கப்பட்ட ஆன்லைன் ரயில் இ-டிக்கட் முன் பதிவுக்கான சேவையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும் என ஐ.ஆர்.சி.டி.சி- யின் ஏஜண்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் தமிழ்நாடு இ-டிக்கட் ஏஜண்டுகள் நலச்சங்கத்தின் தலைவர் மோகன சுந்தரம், துணைத்தலைவர் இளங்கோவன், செயலாளர் கண்ணன், இணைச்செயலாளர் முகமது இப்ராகிம், உதவி செயலாளர் செல்வராஜ், ஆகியோர் கூறியதாவது;- ஐ.ஆர்.சி.டி.சி ஆன்லைன் மூலம் டிக்கட் வழங்க 100-க்கும் மேற்பட்ட ஏஜண்டுகளை நியமித்து ரூ10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பிணைத்தொகையாக பெற்றுக்கொண்டு சப்-ஏஜெண்டுகளை நியமிக்த்துள்ளனர். 5-லட்சத்திற்கும் மேற்பட்ட சப்-ஏஜண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 5-ஆயிரம் பேர் உள்ளனர். ஏராளமான பயணிகள் ஆன்-லைன் மூலம் டிக்கட் எடுத்து வந்தனர். இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி ஐ.ஆர்.சி.டி.சி இ-டிக்கட் முன்பதிவி வசதியை காலவதியாகிவிட்டதாக கூறி 1-ந் தேதி முதல் நிறுத்திவிட்டது. இதனால் பயணிகளுக்கு முன் பதிவு டிக்கட் வழங்கமுடியவில்லை. டிக்கட்டை ரத்து செய்து கொடுக்கவும் முடியவில்லை. இதன் காரணமாக பயணிகள் மிகவும் அவதிபடுகின்றனர். இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 11/2 லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, சப்-ஏஜண்டுகளின் இ-டிக்கட் முன்பதிவு வசதியை மீண்டும் தொடங்க ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.