ராகுல் காந்தி மீது பொய் வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கு 50 லட்சம் அபராதம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

லக்னோ, மார்ச்.8- உத்தரபிரதேச மாநிலம் லக்னோ ஐகோர்ட்டில், முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே ஒரு வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அவர், ``காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தனது அமேதி தொகுதியில் 2006-ம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பல்ராம் சிங் என்பவரது வீட்டில் தங்கினார். அதன்பின் பல்ராம்சிங், அவரது மனைவி சுமத்திரா தேவி, மகள் சுகன்யா தேவி ஆகியோரை காணவில்லை. அவர்களை ராகுல்காந்தி கடத்திச் சென்று விட்டாரா? என்பது பற்றி விசாரிக்க வேண்டும்\'\' என்று புகார் கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து இந்த புகார் பற்றி விசாரிக்க உ.பி. போலீஸ் டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உமாநாத் சிங், சதீஷ் சந்திரா ஆகியோர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, பல்ராம் சிங், சுமத்திரா தேவி, பல்ராம்சிங் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் கோர்ட்டில் அளித்த வாக்கு மூலத்தில், ``எங்களை யாரும் கடத்த வில்லை. தவறான வழியில் எங்களை ஈடுபடுத்த வில்லை\'\' என்று குறிப்பிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அத்துடன் தேவையற்ற பொய்யான வழக்கை தொடர்ந்த கிஷோர் சம்ரிதேக்கு நீதிபதிகள் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.