சென்னை சேலையூரில் புதிய பல் மருத்துவ மனை; மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை சேலையூரில் புதிய பல் மருத்துவ மனை; மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார். சென்னை, மார்ச்;8- சென்னை சேலையூரில் ஸ்ரீ ராகவேந்திரர் பல் மருத்துவமனை திறப்புவிழா 6-03-11 ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது. இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார். சேலையூர் கேம்ப்ரோடு ஐ.ஓ.பி காலணி முதல் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பல் மருத்துவமனை திறப்புவிழாவிற்கு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமைவகித்து திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஸ்டார் டயக்னோஸ்டிக் மையத்தை திறந்துவைத்தார். கருத்தரங்கு மையத்தை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார். இந்த சிறப்பான விழாவில் பேரூராட்சி தலைவர்கள் மருத்துவ நிபுணர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவுக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்களை பல் சிகிச்சை நிபுணர் டாக்டர் G. திருப்பதி பொன்னாடை போர்த்தி சிறப்பித்து வரவேற்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.