சோமாலியா கடற்கொள்ளையரால் 4 வருடத்தில் 70 கப்பல்கள் கடத்தல்; மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தகவல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, மார்ச்.8- சோமாலியா கடற்கொள்ளையரால் 4 வருடத்தில் 70 கப்பல்கள் கடத்தப்பட்டதுள்ளது என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- 2008-ம் ஆண்டு இந்திய பணியாளர்கள் இருந்த 23 கப்பல்கள் கடத்தப்பட்டன. 50 இந்திய பயணிகள் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அந்த ஆண்டு ஒரு இந்திய வர்த்தக கப்பல் கடத்தப்பட்டு 13 இந்தியர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். 2009-ம் ஆண்டு இந்திய பணியாளர்கள் இருந்த 21 கப்பல்கள் கடத்தப்பட்டு 58 பேர் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். இதே போல 8 இந்திய வர்த்தக கப்பல்கள் கடத்தப்பட்டு 116 பேர் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். 2010-ம் ஆண்டு இந்திய பணியாளர்கள் இருந்த 24 கப்பல்கள் கடத்தப்பட்டு 11 பேர் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். அந்த ஆண்டு ஒரு வர்த்தக கப்பல் கடத்தப்பட்டு 14 பேர் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். 2011-ம் ஆண்டு கடந்த 2-ந் தேதி வரை இந்திய பணியாளர்கள் இருந்த 2 கப்பல்கள் கடத்தப்பட்டு 26 பேர் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஒரு வர்த்தக கப்பல் கடத்தப்பட்டு 14 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். ஆக மொத்தம் கடந்த 4 ஆண்டுகளில் இந்திய பணியாளர்கள் இருந்த 70 கப்பல்களும், 11 இந்திய வர்த்தக கப்பல்களும் கடத்தப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு படையி னரால் மொத்தம் 75 கடற்கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டனர். 2008-ம் ஆண்டு 23 கடற்கொள்ளை யர்களும், 2011-ம் ஆண்டு 55 கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த கடற்கொள்ளையர்களுக்கு எதிராக மும்பை போலீஸ் நிலையத்தில் கடலோர படை வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு எதிரான தண்டனை நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. வர்த்தக கப்பல்களில் உள்ள இந்திய பயணிகளிடம் கொள்ளை நடப்பதும் அவர்களை சிறை பிடிப்பதும் அதிகரித்து வருவதும் கவலை அளிப்பதாக உள்ளது. இத்தகைய கடற்கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடற்படை கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டமை கடற் கொள்ளை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள், வெளியீடு, இந்திய கப்பல் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மந்திரி ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.