ரயிலில் மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்; ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுதில்லி, மார்ச் 9 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி மாணவிகள் தாங்கள் கல்லூரி செல்லும் வரையில், அவர்களுக்கு ரயிலில் இலவச சீசன் டிக்கெட் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உள்ளூர் ரயிலில் பயணம் செய்ய மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை இலவச சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நேற்று (மார்ச் 8) அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநிலங்களவையில் இன்று ரயில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார். மேலும், ரயில்வேத்துறை சார்பில் பல்வேறு நகரங்களில் பெண்களுக்கான தொழிற் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.