காஷ்மீர் சிறைக்கு மாற்ற அப்சல்குரு கோரிக்கை: பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீசு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடில்லி, பிப்;12- திகார் சிறையிலிருந்து, காஷ்மீர் சிறைக்கு தன்னை மாற்ற வேண்டும் என, தீவிரவாதி அப்சல் குரு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001ல் நடந்த பாராளுமன்ற தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவன் தீவிரவாதி அப்சல் குரு. இந்த வழக்கில் இவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை குறைக்கும்படி, அப்சல் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் அப்சல் குரு, ஒரு மனு தாக்கல் செய்திருந்தான். அதில் கூறப்பட்டதாவது:என் சொந்த மாநிலம் காஷ்மீர். என் குடும்பத்தினர் அங்கு தான் உள்ளனர். குறிப்பாக, என் 11 வயது மகன், 80 வயதை கடந்த தாய் ஆகியோர் அங்கு வசிக்கின்றனர். இவர்களால் என்னை அடிக்கடி டில்லி திகார் சிறைக்கு வந்து பார்க்க முடியாது. மேலும், அடிக்கடி டில்லிக்கு வருவதற்கு அவர்களுக்கு செலவு அதிகமாகிறது. எனவே, என்னை காஷ்மீரில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்சல் குரு சார்பாக ஆஜரான வக்கீலிடம் \"காஷ்மீரை தவிர, வேறு மாநிலத்தில் உள்ள சிறைக்கு அப்சல் குருவை மாற்றினால் ஏற்றிக் கொள்வீர்களா\' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த வக்கீல், \"பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட், காஷ்மீருக்கு அருகில் உள்ளது. எனவே, அங்குள்ள சிறைக்கு மாற்றலாம்\' என்றார்.இதையடுத்து, இந்த விவகாரம் சம்பந்தமாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.