அசன் அலிக்கு, மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மும்பை, மார்ச்.9- அசன் அலிக்கு அமலாக்க பிரிவு காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்கும்படி நீதிபதி உத்தரவு. மராட்டிய மாநிலம், புனேயை சேர்ந்த பிரபல தொழில் அதிபரான அசன் அலி, வெளிநாட்டு வங்கிகளில் ரூ.40 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பதுக்கி வைத்து இருக்கிறார். அத்துடன் ரூ.50 ஆயிரம் கோடி வருமான வரி ஏய்ப்பு செய்துள்ள அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து புனேயில் உள்ள அவருடைய வீட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அமலாக்க பிரிவு காவலில் வைக்கப்பட்டு இருந்த அவர் இன்று மும்பையில் உள்ள முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அமலாக்க பிரிவு காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்கும்படி நீதிபதி தகலியானி உத்தரவிட்டார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.