எகிப்தில் அதிரடி திருப்பம் பதவி விலகினார் முபாரக் : தலைமை பதவிக்கு 2 ராணுவ அதிகாரிகள் போட்டி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கெய்ரோ, பிப். 12- எகிப்து நாட்டில் ஆட்சி நடத்தி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் 18 நாள் போராட்டத்துக்கு பிறகு முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கெய்ரோவில் இருந்து குடும்பத்துடன் தப்பி சென்றுவிட்டார். இதை தொடர்ந்து முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. தற்போது ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இத் தகவலை துணை அதிபர் ஒமர் சுலைமான் அறிவித்ததாக அரசு தொலைக் காட்சியான அல் ஜகீரா நேற்று இரவு அறிவித்தது. இந்த அறிவிப்பை கேட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிபர் தப்பி ஓடிய அறிவிப்பை கேட்ட பொது மக்களின் போராட்டம் வெற்றி கொண்டாட்டமாக மாறியது. கெய்ரோவில் உள்ள விடுதலை சதுக்கம், அதிபர் மாளிகை மற்றும் பாராளுமன்றத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நாடு முழுவதும் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். ஆடிப்பாடி ஆனந்த கூத்தாடினர். தேச பக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். கெய்ரோ அலெக் சாண்ட்ரியா உள்ளிட்ட வீதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களின் ஹாரன்களை தொடர்ந்து அடித்தனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். துப்பாக்கி வைத்திருந்தவர்கள் வானில் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எகிப்தில் எற்பட்ட ஆட்சி மாற்றம் துனிசியாவிலும் எதிரொலித்தது. அங்குள்ள மக்கள் வீதிகளுக்கு வந்து இதை விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், இஸ்ரேல், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. எகிப்து தங்களுடன் கொண்டுள்ள உறவில் மாற்றம் வராது என தெரிவித்துள்ளனர். இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சரியான நேரத்தில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்தியா வரவேற்கிறது. அதிபர் முபாரக் பதவி விலகியது வரவேற்க தக்கது. எகிப்து மக்களுடன் பாரம்பரிய உறவு வைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறோம். அங்கு அமைதி, ஸ்திரதன்மை, மற்றும் அனைத்து வளம் பெருக வாழ்த்துகிறோம். என்று தெரிவித்துள்ளார். இதற்கிடைய எகிப்தில் ஆட்சியை பிடிக்க ராணுவ அதிகாரிகள் பீல்டு மார்ஷல் மொகது உசேன் கந்தாவி (75), லெப்டினனட்ட் ஜெனரல் சமி ஹபீஸ் எனான் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்களில் பீல்டு மார்ஷல் கந்தாவி முபாரக்கின் ஆதரவாளர் ஆவார். அதே நேரத்தில் எனான் அமெரிக்காவின் ஆதரவாளராக உள்ளார், எனவே இவரிடம் பொறுப்பை ஒப்படைக்க அமெரிக்கா விரும்புகிறது. எனவே இவர்களில் ஒருவர் ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் வரை ஆட்சி பொறுப்பில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.