இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யகூடாது: தேர்தல் கமிஷன் திட்டவட்ட அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, மார்ச்.10- சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள விதிமுறைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தை நீடிப்பதற்கு அனுமதி வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் பிரசாரத்தை இரவு 11 மணி வரை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.