ஸ்பெக்ட்ரம் விவகாரம்- மன்மோகன்சிங்கிடம் விரைவில் விசாரணை; பொது கணக்குக்குழு தீவிரம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, மார்ச்.10- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விரைவில் விசாரணை செய்ய பொது கணக்குக்குழு தீவிரமாக உள்ளது. இது குறித்து விபரம் வருமாறு:- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் காரணமாக அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, பாராளுமன்ற கூட்டுக்குழு, பொது கணக்கு குழு, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., வரும் 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனைவரிடமும் வசாரணையை நடத்தி முடித்து விட சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர். அது போல அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் உலகின் எந்தெந்த நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல நாடுகளின் ஒத்துழைப்பை அமலாக்கப் பிரிவு நாடி உள்ளது. இதற்கிடையே பாராளுமன்ற பொது கணக்கு குழுவினரும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே இந்த குழு பல்வேறு அரசுத் துறையினரிடம் விசாரணை நடத்தி முடித்து விட்டது. அடுத்து பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயர், மந்திரி சபை செயலாளர் சந்திரசேகர், அமலாக்கப்பிரிவு இயக்குனர் அருண்மாத்தூர் ஆகியோரை அழைக்க பொது கணக்குக் குழு முடிவு செய்துள்ளது. அடுத்தக் கட்டமாக பிரதமர் மன்மோகன்சிங்கை இந்த குழு விசாரிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. பிரதமரிடம் நடத்தப்படும் விசாரணைக்காக பொது கணக்கு குழு விரைவில் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரை விசாரிக்க அழைப்பதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் முன்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது கூட்டுக்குழு விசாரணை நடப்பதால் காங்கிரஸ் எம்.பி.க்களின் எதிர்ப்பு குறைந்து விட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.