தலைமை தேர்தல் கமிஷனர்; தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 12- தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று தேர்தல் கமிஷனர் குரேஷியை சந்தித்தனர். அப்போது, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகள் எந்த அளவில் நடந்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்தார். பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். பள்ளிகளில் தேர்வு முடியும் தேதி, வாக்குச்சாவடிகள், வாக்காளர் பட்டியல், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஓட்டுப்பதிவுக்காக வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்னணு எந்திரங்கள் வரவழைக்கப் பட்டுள்ளன. மாவட்ட தலைநகரங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிய உள்ள உதவி கலெக்டர்கள், தாசில்தார்களுக்கு 2 வார தேர்தல் பயிற்சி நடைபெற இருக்கிறது. இது வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. தேர்தல் பணிக்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 லட்சம் பேர் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் பயிற்சி அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. விடுபட்டவர்கள் தேர்தல் நடைபெறும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. பள்ளிகள், சமூகக்கூடங்கள், பொது நிறுவன அலுவலகங்கள் உள்பட 29 ஆயிரம் இடங்களில் இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தலை சுமூகமாக நடத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினரை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளில் ?வெப்? கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதட்டமான இடங்கள் கண்டு அறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவை வீடியோவில் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதை தலைமை தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளார். ஓட்டுப்பதிவு எந்திரத்தில் யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதை அறிய ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை தடுக்க புதிய முறை அறிமுகம் செய்யப்படும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சென்னை வந்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தமிழக சட்டசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் நேற்று இரவு சென்னை வந்த அவர் இன்று காலை கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி.) நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதற்கிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று தேர்தல் கமிஷனர் குரேஷியை சந்தித்தனர். அப்போது, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகள் எந்த அளவில் நடந்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்தார். பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். பள்ளிகளில் தேர்வு முடியும் தேதி, வாக்குச்சாவடிகள், வாக்காளர் பட்டியல், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேல்சபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் தகவல்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் சட்டசபை தேர்தல் தேதி குறித்தும், மேல்சபை தேர்தலை எப்போது நடத்துவது என்பது பற்றியும் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.