கறுப்பு பணம்: ஹசன் ஹலி ஜாமீனில் விடுவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மும்பை, மார்ச் 11,2011 சுவிஸ் வங்கியில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி அளவில் கறுப்புப் பணம் வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புனே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹசன் அலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அண்மையில் ஹசன் அலி வீட்டில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அவரை மும்பை அழைத்து வந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த இரு நாட்களாக அமலாக்கப் பிரிவு இயக்ககம் காவலில் விசாரிக்கப்பட்டு வந்த அவர் இன்று மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கப் பிரிவு இயக்ககம் சார்பில் கோரப்பட்டது. ஆனால், அதற்கு போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததல், ஹசன் அலிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது நீதிமன்றம். முன்னதாக, ஹச‌ன் அ‌லி வழ‌க்‌கி‌ல் அரசு மெ‌த்தனமாக இரு‌ப்பதாக சாடியதோடு, அரசு ‌விசா‌ரி‌க்கா‌வி‌ட்டா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்றமே ‌விசா‌ரி‌க்கும் எ‌‌ன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்தனர். இ‌தைத் தொடர்ந்தே ஹச‌ன் அ‌லி‌க்கு ம‌த்‌திய அமலா‌‌க்கப்‌‌பி‌ரிவு நோட்டீஸ் அனு‌ப்‌பி, தீவிர விசாரணையில் ஈடுபட்டது. இதனிடையே, பல்லாயிரம் கோடியில் வரி ஏய்ப்பு, கறுப்பு பணப் பதுக்கல் முதலியவற்றில் ஈடுபட்டதுடன், ஆயுத வியாபாரிகளுடனும் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் தொழிலதிபர் ஹசன் அலி மீது தீவிரவாத தடுப்பு சட்டமான \'பொடா\'வின் கீழ் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று உச்ச நிதிமன்றம் கேள்வி எழுப்பியதும் கவனத்துக்குரியது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.