கவுண்டம்பாளையத்தில் ஜெயலலிதா போட்டி: ஸ்ரீரங்கத்திலும் நிற்க ஏற்பாடு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,மார்ச்:11- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 2 தேர்தல்களில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அல்லது திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வந்துள்ளது. கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் மேற்கு மாவட்டங்கள் அ.தி.மு.க. செல்வாக்கு மிகுந்த பகுதி. கோவை மற்றும் திருப்பூர் இணைந்து ஒரே மாவட்டமாக இருந்த போது 14 தொகுதிகள் இருந்தன. அதில் 3 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இப்போது திருப்பூரை தலைநகராக கொண்டு தனி மாவட்டம் உதயமாகி விட்டது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இதில் கோவை கிழக்கு தொகுதி மட்டுமே தி.மு.க. கைவசம் உள்ளது. இந்த தொகுதியில் வென்ற பொங்கலூர் பழனிசாமி அமைச்சராக உள்ளார். ஏணைய 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வின் கையே ஓங்கியது. இந்த பகுதியில் உள்ள 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். எனவே கோவை மாவட்டத்தில் ஜெயலலிதா போட்டியிடுவது பாதுகாப்பானது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜெயலலிதாவும் அந்த பகுதியில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட முடிவு செய்துள்ளார்.கவுண்டம்பாளையம் தொகுதியை ஜெயலலிதா தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கோவை புறநகர் பகுதியான கவுண்டம் பாளையம் தொகுதியில் கிராமப்புறங்களும் அதிக அளவில் உள்ளன.திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிட ஏற்பாடு நடந்து வருகிறது. கவுண்டம்பாளையம், ஸ்ரீரங்கம் ஆகிய இரு தொகுதிகளிலும் கூட ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.