வெளிநாடுகளில் கறுப்புபணம் ஊழலை தடுக்க புதிய சட்டம் மத்திய அரசு முடிவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, பிப்.12- இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கான பணம் வெளிநாடுகளில் கறுப்பு பணமாக இருக்கிறது. வரி ஏய்ப்பு, சட்ட விரோத முதலீடு மூலம் கறுப்பு பணம் வெளிநாடுகளில் குவிந்து வருகிறது. வெளிநாடுகளில் கறுப்புபணம் செல்வதை தடுக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. வெளிநாடுகளில் கறுப்பு பணம் குவிந்து வருவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது. இதன் எதிரொலியாக ஊழல் மூலம் வெளிநாடுகளில் கறுப்பு பணம் செல்வதை தடுக்கும் விதமாக புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்காக மத்திய மந்திரி சிதம்பரம் தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய மந்திரிகள் குழு ஆய்வு செய்தது. வெளிநாடுகளில் குவிந்து வரும் கறுப்புபணம் தொடர்பாக ஐக்கிய நாட்டு சபையுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மனு ஆய்வு செய்யப்படுகிறது. ஊழல் தடுப்பு தொடர்பான இந்த புதிய சட்டம் விரைவில்பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.