100 தொகுதிகளில் பணம் விளையாடும்: தேர்தல் ஆணையம் கணிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 12- 100 தொகுதிகளில் பணம் விளையாடும் என்று தேர்தல் ஆணையம் கணிப்பு எடுத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி யுள்ளது. தொகுதி களை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த தேர்தலில் பண பலம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு பணியை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. அவர்கள் மாறு வேடங்களில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் அதிக அளவு பணம் விளையாடும் என தேர்தல் கமிஷன் கணித்துள்ளது. குறிப்பாக இடைத் தேர்தல் நடந்த மதுரை மாவட்ட தொகுதிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகமாக பணப்புழக்கம் இருக்கும். பணம் மூலம் வாக்காளர்களை கவர தேர்தலில் போட்டியிடுபவர்கள் திட்டமிடலாம் என கருதப்படுகிறது. எனவே, அந்த தொகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.