ஜெயலலிதாவுடன் ரங்கசாமி சந்திப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 12- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி ரங்கசாமி சந்தித்தார். புதுவை முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமி. இவர் காங்கிரசில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ஆவதற்கு திட்டமிட்டார். என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் ரங்கசாமி இன்று சந்தித்து பேசினார். இன்று காலை 11.45 மணி முதல் 12.15 மணிவரை சுமார் அரை மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் வெளியில் வந்த ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- புதிதாக தொடங்கப்பட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது. மரியாதை நிமித்தமாக இன்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன். கேள்வி: கூட்டணி குறித்து என்ன பேசினீர்கள். பதில்:- கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ இன்று எதுவும் பேசவில்லை. கேள்வி:- இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?. பதில்:- புதுச்சேரியை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்வது தான் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார். புதுச்சேரியில் அ.தி.மு.க. வுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காகத்தான் ஜெயலலிதாவை ரங்கசாமி இன்று சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ரங்கசாமியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதன் பிறகு அ.தி.மு.க.- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று அ.தி. மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.