உலககோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நாக்பூர், மார்ச். 13- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா (பிரிவு பி) அணிகள் மோதின. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக சச்சினும், ஷேவாக்கும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலிலே அதிரடியாக விளையா வந்தனர். ஷேவாக் ஒரு புறம் பவுண்டரிகளா விளாசி ரன் குவித்தார். 10 ஓவர் முடிவில் இந்தியா 87 ரன்கள் எடுத்திருந்தது. சிறிது நேரத்தில் ஷேவாக் 50 ரன்னை தொட்டார், அவரை தொடர்ந்து சச்சினும் அரை சதம் அடித்தார். இருவரும் தென். ஆப்பிரிக்கா பந்து வீச்சை நாளா புறமும் வீளாசினர். பெலிசிஸ் வீசிய 18-வது ஓவரில் ஷேவாக் போல்டு ஆனார். அவர் 73 ரன் சேர்த்தார் அப்பொழுது இந்தியாவின் ஸ்கோர் 142 ரன்களாக இருந்தது. பின்னர் களம் வந்த காம்பீர் நிதானமாக விளையாடி வந்தார். 23 ஓவர் வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடி சச்சின் சதம் அடித்தார். இது இவருக்கு 48-வது சதமாகும். சச்சினை தொடர்ந்து காம்பீரும் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க தென். ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் தினறி வந்தனர். 40-வது ஓவரில் இந்த ஜோடியை மார்க்கெல் பிரித்தார். சச்சின் 111 ரன் இருக்கும் போது டுமினியிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த பதான் ரன் எதுவும் எடுக்காமல் விளையாடி வந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய காம்பீர் ஸ்டெய்ன் பந்தில் அவுட் ஆனார். அவர் 75 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகள் விளாசி 69 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த யுவராஜ் பொறுப்புடன் விளையடினார். மறுமுனையில் விளையாடிய பதான் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார். அதன் பின் வந்த கேப்டன் டோனி யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். 43-வது ஓவரில் காலிஸ் பந்தில் யுவராஜ் 12 ரன்னில் அவுட் ஆனார். அப்பொழுது இந்திய அணியின் ஸ்கோர் 283 ரன்னாக இருந்தது. அதன் பின் வந்த வீரர்கள் சொற்ற ரன்னிலே ஆட்டம் இழந்தனர். 48.4 ஓவரில் இந்திய அணி 296 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்.ஆப்பிரிக்கா பவுலர்கள் தரப்பில் ஸ்டெய்ன் 5 விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 49.3 ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக காளீஸ் 69 ரன்களும் அம்லா 61 ரன்களும், வில்லியர்ஸ் 52 ரன்களும் எடுத்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.