ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்\' ; ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடங்கினார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஐதராபாத், மார்ச்.13- ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த நவம்பர் மாதம் காங்கிரசில் இருந்து விலகினார். அவர் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஜக்கம்பேட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தனது தந்தை சமாதியில் `ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்\' என்ற தனிக்கட்சியை 12-ந் தேதி தொடங்கப் போவதாக அறிவித்தார். அதன்படி, ராஜசேகர ரெட்டியின் சமாதி அமைந்துள்ள இடுபுலபாயா எஸ்டேட்டில நேற்று ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடங்கினார். கட்சி கொடியையும் அவர் ஏற்றிவைத்தார். ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். கடப்பா மாவட்டத்தில் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அவர் இன்று அறிமுகப்படுத்தினார். தனது தந்தையை குறிப்பிடும் வகையில் ஒய்எஸ்ஆர் என்ற எழுத்துக்களை ஜெகன் தனது கட்சிப் பெயரில் இணைத்துள்ளார். வெள்ளை, பச்சை, நீலம் ஆகிய நிறங்களைக் கொண்டுள்ள கட்சிக் கொடியின் நடுவே ராஜசேகர ரெட்டியின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. 2009, செப்டம்பர் 2-ம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி காலமானார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெகன் மோகன் ரெட்டி அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.