மேடவாக்கம் அருகே தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்தது 3 என்ஜினீயர்கள் பரிதாப சாவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தாம்பரம், மார்ச். 13- மேடவாக்கம் அருகே தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 என்ஜினீயர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேடவாக்கம் சிவகாமி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (28), சதீஷ்குமார் (24), நன்மங்கலத்தை சேர்ந்தவர் திலீப்குமார் (24). 3 பேரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள். பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தார்கள். நேற்று இரவு 3 பேரும் காரில் தாம்பரம் வந்தனர். அங்கு சாப்பிட்டு விட்டு இரவு 11.30 மணியளவில் மேடவாக்கத்துக்கு சென்றார்கள். காரை பிரபாகரன் ஓட்டினார். மேடவாக்கம் அருகே செல்லும் போது கார் தாறு மாறாக அதிவேகமாக சென்றது. திடீரென்று ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி திரும்பி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பிரபாகரன் உடல் துண்டாகி அதே இடத்தில் இறந்தார். மற்றவர்கள் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பிணங்களை மீட்டு குரோம் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான பிரபாகரன் மதுரையை சேர்ந்தவர். சதீஷ்குமார் சேலத்தை சேர்ந்தவர். இருவரும் மேடவாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்தனர்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.