தமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் ஜனதா கட்சி போட்டி; சுப்பிரமணிய சாமி பேட்டி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மதுரை, மார்ச். 13- தமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் ஜனதா கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. விடுதலை புலிகள் நடமாட்டமும் உள்ளது. மதுரையில் எங்கள் கட்சி சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். தமிழ்நாட்டில் மொத்தம் 15 தொகுதிகளில் போட்டியிடுவோம். தேர்தலில் 5 தொகுதிகளுக்கு மேல் எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் ஆட்சியாளர்கள் ஊழல் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் சக்தியாக செயல்படுவோம். பாரதீய ஜனதாவின் கருத்தும் எங்கள் கட்சியின் கருத்தும் ஒருமித்த கருத்தாக உள்ளது. எனவே அவர்கள் போட்டியிடும் தொகுதியில் நாங்கள் போட்டியிட மாட்டோம். பா.ஜ.க. எங்களை கூட்டணிக்கு அழைத்தால் அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் தயாராக இருப்போம். தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிறகு புதிய கூட்டணி அமையும். வாக்காளர்கள் பணத்துக்காக ஓட்டு போட கூடாது. மக்கள் மீது அக்கறை உள்ள கட்சிக்கு மட்டும் ஓட்டு போட வேண்டும். எந்திர ஓட்டு பதிவில் முறைகேடு நடப்பது உண்மை தான். தமிழ்நாட்டில் சிறையில் உள்ள குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடலாம் என்று தெரிகிறது. அதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். தேர்தல் பணியில் குற்றவாளிகள் ஈடுபட்டால் நாங்களும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.