தமிழ்நாடு ஒருங்கினைந்த பட்டதாரி ஆசிரியர் கழகம் உண்ணாவிரதப் போராட்டம்

| [ திரும்பி செல்ல ]

சென்னை,மார்ச்;13- ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஐந்து லட்ச அரசு ஊழியர்களின் எதிர் கால நலன்களைப் பாதிக்கும் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு ஒருங்கினைந்த பட்டதாரி ஆசிரியர் கழகம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. சென்னை காயிதே மில்லத் மணி மண்டபம் எதிரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாநில தலைவர் க. அருண்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பூ. சீத்தாராமன் வரவேற்புரையாற்றினார். நிறுவனத்தலைவர் தாமரைக்கண்ணன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் மாநில தலைவர் கோ. சூரிய மூர்த்தி எழுச்சியுரையாற்றினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் வந்திருந்து கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.