பணி நிறைவு பாராட்டுவிழா

| [ திரும்பி செல்ல ]

சென்னை,மார்ச்;13- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு பணியாளர்கள் சங்கம் சார்பாக பணிநிறைவு பாராட்டுவிழா கீழ்ப்பாக்கம் பி.டி.ஆர். கல்யாண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு பணியாளர்கள் சங்க தலைவர் எஸ். குணசேகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு முதன்மைச்செயலாளர் க.சண்முகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் முனைவர் வீர சண்முகமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா நிறைவாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு பொது மேலாளர் இரா.பிச்சைக்கண்ணு ஏற்புரை வழங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு பணியாளர்கள் சங்க பொருளாளர் எம். இராமலிங்கம் நன்றியுரையாற்றினார்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.