கட்டிட அனுமதியில் முறைகேடு: நொளமபூர் ஊராட்சிக்கு நோட்டீஸ்

| [ திரும்பி செல்ல ]

சென்னை, மார்ச்.13- கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதில் முறைகேடு நடந்துள்ளதால் விளக்கம் கேட்டு நொளம்பூர் ஊராட்சிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்தும், சி.எம்.டி.ஏ.வில் இருந்தும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டது நொளம்பூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் புற்றீசல் போல் முளைக்கும் அடுக்குமாடி கட்டிடங்கள் தொலைநோக்கு பார்வையில்லாம்லும் செங்கல்சேம்பர் நடத்திய பள்ளமான இடங்களில் மண்ணைகொட்டி அதன் மேல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடங்கள் சரியானபடி உள்கட்டமைப்பு இல்லாமலும் கட்டிடம் கட்ட சிஎம்டிஏ நிர்வாக அனுமதி வழங்கியுள்ளதாக்வும் மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமலும் பொது நல சங்கங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தின ஆனால் போராட்டக்காரர்களுக்கு எந்த விதமான பல்னும் இல்லை. இது குறித்து பொது நலசங்கங்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த இரண்டு மாதத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகள் திட்டப்பணிகளில் தில்லு முல்லு செய்ததால் மாவட்ட கலெக்டரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நொளம்பூர் ஊராட்சியில் சட்டவிதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா? முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என 1994-ல் 205/1எ எண் விதியின் கீழ் நொளம்பூர் ஊராட்சிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், சிஎம்டிஎ-வில் இருந்தும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.