குன்றத்தூர் மருந்து கம்பெனியில் பாய்லர் வெடித்து தீ விபத்து; காவலாளி கருகி சாவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பூந்தமல்லி, மார்ச் 13- குன்றத்தூர் மருந்து கம்பெனியில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் காவலாளி உடல் கருகி இறந்தார். குன்றத்தூர் அருகே கோவூர் செக்கட்டி தெருவில் தனியாருக்கு சொந்தமான மருந்து- மாத்திரைகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு 300-க்கும் மேற் பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். நேற்று மாலை பணி முடிந்ததும் கம்பெனி உரிமையாளர் கிருஷ்ணமூர்த்திகம் பெனியை பூட்டிச் சென்றார். 2 காவலாளிகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இரவு 8.30 மணி அளவில் ஒரு காவலாளி சாப்பிட சென்று விட்டார். நேபாளத்தைச் சேர்ந்த அரி பிரசாத் சர்மா (30) என்ற காவலாளி மட்டும் பணியில் இருந்தார். அப்போது கம்பெனிக்குள் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே காவலாளி அரி பிரசாத் சர்மா ஓடிச் சென்று பார்த்தார். அங்கு பாய்லர் வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. தீ மளமள வென்று பரவியதால் மருந்து பாட்டில்கள் வெடித்து சிதறின. அரி பிரசாத் சர்மாவும் தீயில் சிக்கிக் கொண்டார். தகவல் கிடைத்ததும் குமணன் சாவடி, கிண்டி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீக்காயம் அடைந்த அரி பிரசாத்தை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தீயில் பல லட்சம் மதிப்புள்ள மருந்து-மாத்திரைகள் எரிந்து நாசமானது. மருந்து தயாரிக்கப் பயன் படும் ரசாயன கலவையிலும் தீப்பிடித்து எரிந்ததால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். பாய்லர் வெடித்து சிதறிய சத்தம் 2 கி.மீ. தூரத்துக்கு கேட்டது. இதுபற்றி மாங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.