கலைஞர் டிவி நிர்வாக இயக்குனரிடம் சிபிஐ விசாரணை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.15- கலைஞர் டிவி நிர்வாக இயக்குனரிடம் சிபிஐ விசாரணை, 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பாக, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் டெல்லியில் சிபிஐ திங்கட்கிழமை விசாரணை நடத்தியது. முன்னதாக, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அவருக்கு தகவல் தரப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு அவர் ஆஜரானார். சினியுக் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.,க்கு ரூ. 214 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தற்போது சரத் குமாரிடம் மூன்றாவது முறையாக சிபிஐ விசாரித்துள்ளது. கலைஞர் டி.வி. 20 சதவீத பங்குகள் சரத் குமாரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. சினியுக் நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி கடன் பெற்றதாகவும், அத்தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டதாகவும் கலைஞர் டி.வி. நிர்வாகம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.