| [ திரும்பி செல்ல ]

அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற சங்கம் 100 இடங்களில் தனித்து போட்டி சென்னை,மார்ச்;15- வரும் சட்ட மன்ற தேர்தலில் அகில இந்திய கைவினை முன்னேற்றகழகம் 100 இடங்களில் தனித்து போட்டியிடும் என இக்கழகத்தின் நிறுவனரும் தலைவருமான விசு. சிவகுமார் கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் பேசுகையில் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் அகில இந்திய கைவினை முன்னேற்றகழகமும், இதன் தலைமையில் தோழமையுள்ள தமிழக அனைத்து விஸ்வகர்ம சங்கங்களும் இணைந்து விஸ்வகர்ம சமூகத்தை அரசியல் அரங்கில் தேர்தல் களத்தில் புறக்கணிக்கும் கூட்டணிகளுக்கு எங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், எங்கள் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நாங்கள் வாதாடி பெறுவதற்கும் வருகின்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார். லஞ்ச லாவண்யம் ஒழிய மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி செய்து வருவதாக கூறிய அவர் எங்கள் கூட்டணி மக்களுடன் தான் என்றார். பேட்டியின் போது மாநில தலைவர் பழனிவேலு, செயலாளர் உமாபதி, இளைஞரணி தலைவர் ரவீந்திரன், காஞ்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.