எம். பெரியசாமி நாடார் திருவுருவ படம்; டாக்டர் என்.ஆர். தனபாலன் திறந்து வைத்தார்

| [ திரும்பி செல்ல ]

சென்னை, மார்ச்;15- மறைந்த தலைவர் எம். பெரிய சாமி நாடாரின் திருவுருவப்படத்தை தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் செவாலியர் டாக்டர் என்.ஆர். தனபாலன் திறந்துவைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை ஒட்டேரி வட்டார நாடார் சங்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளிவிழா தலைவர் கே. மாரியப்பன் தலைமையில் ஒட்டேரி வட்டார நாடார் சங்கத் திருமண மாளிகையில் நேற்று நடைபெற்றது. துணைச்செயலாளர் தங்ககுமார் நாடார் வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் நாடார் மற்றும் பொருளாளர் வி. கணேசர் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைந்த தலைவர் எம். பெரியசாமி நாடார் திருவுருவ படத்தை டாக்டர் என்.ஆர். தனபாலன் நாடார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். வெள்ளிவிழா கல்வெட்டையும், சங்கத்தின் நிர்வாகிகள் கல்வெட்டையும் எஸ்.பி. மாரியப்பன் நாடார் திறந்துவைத்தார். சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். விழா முடிவில் சங்க உறுப்பினர் எ. ராமசாமி நாடார் நன்றியுரையாற்றினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.