பாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் முஷரப் பெயர் சேர்ப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இஸ்லாமாபாத், பிப்.7- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் கடந்த 2007-ம் ஆண்டு ராவல் பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின்போது தலிபான் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். பாதுகாப்பு குறைபாடுகளால்தான் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. பெனாசிர் கொலை செய்யப்பட்ட போது இவர் பாகிஸ்தானின் அதிபராக இருந்தார். பதவி விலகியபின் அவர் தற்போது லண்டனில் தங்கியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.