உலக கோப்பை- பயிற்சி போட்டி நாளை ஆரம்பம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பெங்களூர், பிப். 12- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை போட்டி நடை பெறுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி குறித்து மிகுந்த ஆவல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ந்தேதி வரை உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் உள்ள 13 மைதானங்களில் இந்தப் போட்டி நடக்கிறது. இதில் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ?ஏ? பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கென்யா, கனடா அணிகளும், ?பி? பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர் லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டிக்கு முன்பு 14 அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. கென்யா, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் ஏற்கனவே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி விட்டன. உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியும், 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியுமான இந்தியா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ?நம்பர் ஒன்? அணியான ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. பகல் - இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்தது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினால் இந்திய வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படும். இந்திய அணி மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதில் நியூசிலாந்துடன் மோதுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ் - கென்யா (கொழும்பு), நியூசிலாந்து - அயர்லாந்து (நாக்பூர்), கனடா - வங்காளதேசம் (சிட்டாகாங்), இலங்கை - நெதர்லாந்து (கொழும்பு), அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை தொடரில் இம்முறை பயிற்சி மற்றும் லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடக்க உள்ளன. இதன் விபரம்: நாள் அணிகள் இடம் நேரம் பயிற்சி போட்டி: பிப். 13 இந்தியா-ஆஸ்திரேலியா பெங்களூரு மதியம் 2.30 மணி பிப். 16 இந்தியா-நியூசிலாந்து சென்னை மதியம் 2.30 மணி உலக கோப்பை லீக் சுற்று பிப். 19 இந்தியா-வங்கதேசம் மிர்புர் மதியம் 2 மணி பிப். 27 இந்தியா-இங்கிலாந்து பெங்களூரு மதியம் 2.30 மணி மார்ச் 6 இந்தியா-அயர்லாந்து பெங்களூரு மதியம் 2.30 மணி மார்ச் 9 இந்தியா-நெதர்லாந்து டில்லி மதியம் 2.30 மணி மார்ச் 12 இந்தியா-தென் ஆப்ரிக்கா நாக்பூர் மதியம் 2.30 மணி மார்ச் 20 இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் சென்னை மதியம் 2.30 மணி
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.