அ.தி.மு.க.தலைமைக் கழகத்தில் தேர்தலில் போட்டியிட 4 ஆயிரம் பேர் மனு; ஜெயலலிதாவுக்காக 100 தொகுதிகளில் பணம் கட்டினர்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 12- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து சென்னையில் உள்ள கட்சி தலைமைக்கழக அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. தேர்தலில் போட்டியிட 4 ஆயிரம் பேர் மனுஅளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதாவுக்காக 100 தொகுதிகளில் பணம் கட்டியுள்ளனர். கடந்த 18-ந் தேதி மனுக்கள் வாங்கும் பணி தொடங்கியது. விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மனு அளித்துள்ளார். ஜெயலலிதா 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட தலா ரூ. 10 ஆயிரம் பணம் கட்டி அ.தி.மு.க.வினர் மனுக்கள் கொடுத்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் மனு கொடுக்க கட்சி அலுவலகம் முன்னால் திரண்டு உள்ளனர். புதுவை, கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்தும் மனுக்கள் பெறப்படுகின்றன. வருகிற 18-ந் தேதி மனுக்கள் கொடுக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.