பிளஸ்-2 வினாத்தாள் குளறுபடி: கணிதம் கேள்விக்கு மதிப்பெண் அளிக்கப்படும்; தேர்வு அதிகாரி அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 18- தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நடந்து வருகிறது.நேற்று கணிதம் தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், கணக்குகளுக்கு விடை எழுத போதுமான நேரம் இல்லை என்றும் மாணவர்கள் கூறினார்கள். இதனால் பல மாணவர்கள் கேள்விக்கு பதில் எழுதாமலேயே வந்து விட்டனர். அவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்தபோது கண் கலங்கி அழுதனர். என்ஜினீயரிங் போன்ற படிப்புக்கு செல்ல விரும்பியவர்கள் எங்கள் வாழ்க்கையே வீணாகி விட்டது என்று கூறி அழுதனர். இந்த நிலையில் ராசிபுரம் அருகே உள்ள கீரனூரில் உள்ள தேர்வு மையத்தில் வினாத்தாளில் பிழைகள் இருந்தது. மைனஸ் குறி, டிலைடர் குறி, அடைப்பு குறி, குறியீட்டு எண் போன்றவை சரியாக அச்சிடப்படவில்லை. இதனால் கேள்வி புரியாமல் மாணவர்கள் விடை அளிக்க முடியாமல் தடுமாறினார்கள். 1 மார்க், 6 மார்க், 10 மார்க் வினாக்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டு இருந்தன. இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- கணிதத்தேர்வு வினாத் தாளில் சில பகுதிகளில் அச்சு பிழை ஏற்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மற்ற பகுதிகளில் இந்த மாதிரி நிலை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தடுமாறி உள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அச்சு பிழை ஏற்பட்டிருந்த வினாக்களுக்கு மாணவர்கள் தவறாக விடை எழுதி இருந்தாலும் மதிப்பெண் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.