பாரிமுனையில் தொடர் கொள்ளை: ராஜஸ்தானை சேர்ந்த 7 கொள்ளையர்கள் கைது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 21- பாரிமுனை மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பூட்டிய கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. வடசென்னை இணை கமிஷனர் சேசசாயி, பூக்கடை துணை கமிஷனர் பகலவன் ஆகியோரது மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுந்தரேசன், இன்ஸ்பெக்டர் ராயப்பன் ஏசுநேசன், சப்- இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநில கொள்ளையர்கள், மகாவீர், விக்கி, திப்புசிங், கோபால் சிங், கரன்சிங், ரமேஷ், சுரேஷ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடித்த பணத்தில் இவர்கள் அனைவரும் பெங்களூர் சென்று, உல்லாசமாக இருந்துள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.