சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜினாமா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை. மார்ச். 21- சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டெக்கால் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா கடந்த 16-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டெக்கால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 3-ந் தேதியே எனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துவிட்டேன் என்றார். சாதிக் பாட்சா வழக்கு தொடர்பாக உரிய ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை ஆகும்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.