டெல்லி பெண்ணுக்கு 5 1/2 கிலோவில் ஆண் குழந்தை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, பிப். 7- பொதுவாக பிறக்கும் குழந்தைகள் 2 1/2 கிலோவில் இருந்து 3 1/2 கிலோ வரை இருக்கும்.ஆனால் டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தை 5 கிலோ 600 கராம் எடை உள்ளது. அந்த பெண்ணின் பெயர் சஞ்ஜிதா (வயது 30) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை நொய்டாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரசவத்துக்கு முன்பே அந்த குழந்தை அதிக எடை இருப்பதை கண்டுபிடித்து விட்டனர். எனவே 3 டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. பகல் 11.30 மணிக்கு பிரசவ வார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2.30 மணிக்கு சுக பிரசவமாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 5 கிலோ 600 கிராம் 2 அடி உயரமாக பெரிய அளவில் இருந்தது.ஆனாலும் குழந்தை சுக பிரசவமாக பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு பெண்ணுக்கு 5 கிலோ 700 கிராம் எடையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைதான் இந்தியாவில் பிறந்த அதிக எடையுள்ள குழந்தை ஆகும். இதனால் டெல்லியில் இப்போது பிறந்த குழந்தை 2-வது இடத்தை பிடித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.