பாபா ராம்தேவ்ஜி சுவாமிக்கு எதிர்ப்பு: பெரியார் தி.க. ஆர்ப்பாட்டம்; ராயப்பேட்டையில் 32 பேர் கைது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 22- யோகா பயிற்சியில் பிரபலமான பாபா ராம்தேவ்ஜி மகாராஜ் சுவாமிகள் அரித்துவாரில் இருந்து இன்று ஒருநாள் பயணமாக சென்னை வந்திருந்தார். அவர் தனது பக்தர்களுக்கு யோகா பயிற்சியை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சொல்லிக் கொடுத்தார் காலை 5 மணியில் இருந்து 7.30 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று யோகா, மூச்சு பயிற்சி செய்தனர். சுவாமிஜி தனது போதனையில் மாட்டு இறைச்சியை தவிர்த்தால் உடலுக்கு நல்லது என்று போதிப்பது வழக்கம். இதற்கு பெரியார் தி.க. வினர் எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எம்.சி.ஏ. மைதானம் முன்பு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாட்டு இறைச்சியை பச்சையாகவும், சமைத்தும் கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அண்ணாசாலை போலீசார் விரைந்து வந்து பெரியார் தி.க.வினர் 32 பேரை கைது செய்தனர். பெரியார் தி.க. தென்சென்னை மாவட்டத் தலைவர் தவசி குமரன், செயலாளர் உமாபதி, கேசவன், சுகுமார் உள்பட கைதான அனைவரும் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு கொண்டு வந்த மாட்டுக் கறியை மண்டபத்தில் வைத்து சாப்பிட்டனர். ஏழைகளின் உணவு மாட்டு இறைச்சி. அதை உண்ணக்கூடாது என்று சுவாமிஜி சொல்வதால் எதிர்ப்பு தெரிவித்தோம் என்று கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.