இன்ஸ்பெக்டரை தற்கொலைக்கு தூண்டிய உயர் அதிகாரிகள் யார்? சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்

| [ திரும்பி செல்ல ]

சென்னை. மார்ச். 22- மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அவரது தற்கொலை சம்பவம் அறிந்து சி.பி.சி. ஐ.டி. போலீசார் நேற்று விசாரணையைத் தொடங்கினர். இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாள், எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் உயர் போலீஸ் அதிகாரிகள் 3 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களின் தொந்தரவு காரணமாகத்தான் நான் தற்கொலை செய்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார். ராஜசேகரன் தற்கொலை தொடர்பாக ராயப்பேட்டை உதவி கமிஷனர் வசந்தகுமார், மயிலாப்பூர் முன்னாள் உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் ஆகியோரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மயிலாப்பூர் போலீஸ்காரர்கள் சிலரிடமும் விசாரிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேக ரன் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் யார் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால் இன்ஸ்பெக்டர் ராஜசேகரனின் தற்கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜசேகரனின் குடும்பத்தினரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்ததிட்டமிட்டுள்ளனர்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.