போலீஸ் டி.ஜி.பி. போலாநாத் திடீர் டெல்லி பயணம்; தேர்தல் கமிஷனுடன் அவசர ஆலோசனை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 25- தமிழக போலீஸ் டி.ஜி.பி. யாக இருந்த லத்திகா சரண் உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகள், தேர்தலையொட்டி அதிரடியாக மாற்றப்பட்டனர். புதிய போலீஸ் டி.ஜி.பி. யாக போலாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தல் பணிகளை மட்டுமே கவனிப்பதற்காக முதலில் போலாநாத் நியமிக்கப்பட்டார். சட்டம்-ஒழுங்கு பணிகளை லத்திகா சரணே கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் லத்திகாசரண் 52 நாட்கள் விடுமுறையில் சென்றதால் சட்டம்-ஒழுங்கு பணியையும் சேர்த்து கவனிக்க போலாநாத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவர் கூறும் போது, தமிழ்நாட்டில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறினார். இந்நிலையில் போலீஸ் டி.ஜி.பி. போலாநாத், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலையில் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றனர். தேர்தல் கமிஷனின் அவசர அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ள இரு வரும் தமிழக தேர்தல் ஏற் பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள். தேர்தல் அன்று கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்தும், இவற்றை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனர் இவர்களிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.