தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம்; சமீரா ரெட்டி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

டைரக்டர் கவுதம் மேனனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சமீரா ரெட்டி. இப்போது அவரது இயக்கத்திலேயே நடுநிசி நாய்கள் என்ற பட‌த்தில் நடித்து முடித்துள்ளார். வரும் 18ம்தேதி இப்படம் ரீலிஸ் ஆகிறது. இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், நடுநிசி நாய்கள் படத்தின் கதை ஒரு திரில்லர் கதை. சைக்கோ கொலையாளியிடம் மாட்டி அவனிடம் இருந்து தப்பிக்க போராட்டம் நடத்தும் ஒரு கல்லூரி மாணவியின் கதை இது. படம் பிரமாதமாக வந்துள்ளது. நிஜவாழ்வில் திகில் சம்பவங்களை நான் சந்தித்தது இல்லை, என்று கூறினார். யாருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு பதில் அளித்த சமீரா, எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படுகிறேன், என்றார். காதல் பற்றி கூறுகையில், காதலிக்காத அல்லது காதலில் விழாத இளம்பெண்கள் யார்தான் இருக்க முடியும். அந்த வகையில், எனக்கும் காதல் அனுபவம் உண்டு. கல்லூரி வாழ்க்கையில் காதலித்துள்ளேன். ஆனால் பயம், வெட்கம் காரணமாக காதலை சொல்லவில்லை. அது நிறைவேறாமலே போய்விட்டது. இனி புதிதாக காதலிக்க வேண்டும். எனக்கென்று ஒருவர் நிச்சயம் இருப்பார். இப்போதைக்கு எனக்கு யாருடனும் காதல் இல்லை. அதனால் காதலர் தினம் கொண்டாட மாட்டேன். அன்றையதின் பட சூட்டிங்கில் இருப்பேன், என்றார். பேட்டியின்போது தமிழ் ரசிகர்களை ரொம்பவே புகழ்ந்து தள்ளினார் சமீரா. என்னிடம் எனக்குப் பிடித்த விஷயம் என் கண்கள்தான். அதேபோல உலகத்திலேயே எனக்குப் பிடித்த ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள்தான். ரசனையில் நம்பர் ஒன். அதனால்தான் எனக்கு தமிழ் ரசிகர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன், என்கிறார் சமீரா!
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.