ஜெயந்தி தங்கபாலுவை நிச்சயம் தோற்கடிப்பேன்: மயிலை சிவகாமி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,மார்ச்;26- ஜெயந்தி தங்கபாலுவை நிச்சயம் தோற்கடிப்பேன் என, அவருக்கு போட்டியாக மனுதாக்கல் செய்துள்ள மயிலை சிவகாமி கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவுக்கு போட்டியாக தென்சென்னை மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் மயிலை சிவகாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயிலை சிவகாமி, எங்கள் பரம்பரை காங்கிரஸ் பரம்பரையாகும். என் தந்தை சாகும் வரை காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருந்து உயிரிழந்தார். நான் 25 வருடமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறேன். இதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கட்சிக்காக பணியாற்றி இருக்கின்றனர். அவ்வாறு கட்சிக்காக கஷ்டப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது மனைவிக்கு வாய்ப்பு பெற்று தந்துள்ளார். மேலும், தங்கபாலு பல தொகுதிகளில் பணம் பெற்றுக்கொண்டு தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். இவர் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நாளிலிருந்து காங்கிரஸ் கட்சி வளருவதற்காக பாடுபடவில்லை. தன் வளர்ச்சிக்காகவும், சொந்த நலனுக்காகவும் செயல்படும் துரோகியாவார். நான் மயிலாப்பூர் பகுதியில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளேன். மேலும் எனக்கு அப்பகுதி மக்களின் அறிமுகம் உள்ளதால் எனது செல்வாக்கை பயன்படுத்தி நிச்சயமாக ஜெயந்தி தங்கபாலுவை தோற்கடிப்பேன். இதற்காக களத்தில் இறங்கி பணியாற்ற உள்ளேன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலருக்கும் இதேபோல் அவர் மீது கோபம் உள்ளதால், போட்டி வேட்பாளராக களமிறங்கும் நான் ஜெயந்தி தங்கபாலுவை நிச்சயம் தோற்கடிப்பேன் என்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.