கருணாநிதியுடன் அண்ணா அறிவாலயத்தில் காங்.வேட்பாளர்கள் சந்திப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை. மார்ச். 26- வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ததையடுத்து, தமிழக சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல் அமைச்சர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்தார். அப்போது தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர்கள் யசோதா, திருநாவுக்கரசர், டாக்டர். செல்லக்குமார், தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலு ஆகியோரும் முதல் -அமைச்சர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டசபை தேர்தல் குறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும். 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவார்கள். எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. முதல் அமைச்சர் கருணாநிதி 6-வது முறையாக முதல்வர் ஆவார். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி என்பதை இந்த தேர்தல் நிரூபிக்கும். கேள்வி: காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதே? பதில் : சிலர் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். கேள்வி: காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பிரசாரத்துக்கு வருகிறார்களா? பதில்: இதுபற்றி இன்னும் 2 நாளில் அறிவிக்கப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.