10-ம் வகுப்புத் தேர்வு இன்று ஆரம்பம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,மார்ச்:28- தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று (மார்ச் 28) தொடங்குகின்றன. ஏப்ரல் 11 வரை நடைபெறும் இத்தேர்வுகளை சுமார் 8.57 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த 22-ம் தேதி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் தொடங்கின. இந் நிலையில் 10-ம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. 29-ம் தேதி இரண்டாம் தாள், 31-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 1-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 5-ம் தேதி கணிதம், 8-ம் தேதி அறிவியல், ஏப்ரல் 11-ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வுகளை 4.22 லட்சம் மாணவர்கள், 4.35 லட்சம் மாணவிகள் எழுதுகின்றனர். 9,655 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். தேர்வையொட்டி தமிழகம், புதுவையில் 2,923 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 272 பள்ளிகளில் இருந்து, 36 ஆயிரத்து 148 மாணவர்களும், புதுச்சேரியில் 226 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 529 மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். சென்னையில், 223 மையங்களிலும், புதுச்சேரியில் 47 மையங்களிலும் தேர்வுகள் நடக்கின்றன.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.