தங்கபாலு மனைவியின் வேட்பு மனு தள்ளுபடி; மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த தங்கபாலுவின் மனு ஏற்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.28: சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டிய 2 முக்கிய ஆவணங்களை ஜெயந்தி தாக்கல் செய்யாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயந்திக்கு மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயந்தி மெகா டிவியின் நிர்வாக இயக்குநர் என்பதையும், அவருக்கு எதிராக ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதையும் வேட்பு மனுத் தாக்கலின்போது மறைத்துவிட்டார் என காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளரான சிவகாமி தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனிடையே ஜெயந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யவிருப்பதாக தங்கபாலு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்போதைக்கு நான்தான் வேட்பாளர். ஜெயந்தி அனைத்து ஆவணங்களையும் இணைத்திருந்தார், அவற்றில் 2 ஆவணங்களை காணவில்லை. அது எப்படி என்று தெரியவில்லை என தங்கபாலு கூறினார். முன்னதாக மயிலாப்பூரில் ஜெயந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்து அவரது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜெயந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.