எஸ்.பி.பி. சரண் படத்தில் ரஜினி, கமலை விமர்சிக்கும் வசனங்களை நீக்கி தணிக்கை குழு நடவடிக்கை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பிரபல தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண். இவர் சினிமா பின்னணி பாடர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மகன் ஆவார்.எஸ்.பி.பி.சரண் ஏற்கனவே சென்னை-28, குங்குமபூவும் கொஞ்சும் புறாவும், நாணயம் போன்ற படங்களை எடுத்தவர் தற்போது ?ஆரண்ய காண்டம்? என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 52 காட்சிகளை வெட்டி நீக்கிவிட்டு ?ஏ? சான்றிதழ் அளித்துள்ளது. குறிப்பாக ரஜினி, கமலை விமர்சிக்கும் வசனங்கள் நீக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தணிக்கை அதிகாரி பழனிச்சாமி கூறும்போது ஆரண்ய காண்டம் படத்தில் ரஜினி, கமலை சிறுமைப்படுத்தும் சீன்கள் உள்ளன. ஆண்டிகளை மடக்குவது எப்படி என்று பசங்க பேசுவது போன்றும் ஒருவன் கமல் பிடிக்குமா ரஜினி பிடிக்குமா என்று ஆண்டிகளிடம் கேள். கமல் பிடிக்கும் என்றால் கிஸ் கொடுத்து ஈஸியா மடக்கிவிடலாம். ரஜினி பிடிக்கும் என்றால் அந்த பெண்மணி வேறுமாதிரி மடக்க வேண்டும் என்று விளக்கம் சொல்வது போன்றும் வசனங்கள் உள்ளது. அவற்றை நீக்கி விட்டோம் என்றார். இதில் ஜாக்கி ஷெராப் ராயபுரம் தாதாவாக நடித்துள்ளார். அவரது நிர்வாண காட்சிகள், ஆபாசமான மசாஜ் சீன்கள் போன்றவைகளும் படத்தில் இடம் பெற்றுள்ளதாம். இவைகளையும் தணிக்கை குழு நீக்கியுள்ளது. தணிக்கை குழு நடவடிக்கைக்கு எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தை டிரிபியூனலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த படத்தை குமாரராஜா தியாகராஜன் இயக்கியுள்ளார். யாஷ்மின் பொன்னப்பா நாயகியாக நடித்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.