சென்னையில் மராத்தான் ஓட்டம் கென்யா வீரர் வெற்றி

| [ திரும்பி செல்ல ]

சென்னை, பிப். 13- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 9-வது சென்னை மராத்தான் ஓட்டப்பந்தயம் இன்று காலை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடங்கியது. முழு மராத்தான் போட்டியில் கென்யா வீரர் முகுஅந்தோணி வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 2 மணி 15 நிமிடம் 4 வினாடியில் கடந்தார். ராம்சிங் (ராணுவம், ஐதரா பாத்) 2 மணி 22.3 நிமிடத்தில் கடந்த 2-வது இடத்தையும், கொன்யாவை சேர்ந்த கிப்லான் சுடாமி 2 மணி 39.1 நிமிடத்தில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். முதல் 3 இடங்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.