மக்கள் பாதுகாப்பு கழகம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப்.2- வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் ஆதரவாக பிரச்சாரம் செய்கிறது. இது குறித்து இக்கழகத்தின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான மணிமாறன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மக்கள் பாதுகாப்பு கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தி.மு.க. ஆட்சியை ஆதரிப்பது என முடிவு செய்தோம். எங்களது உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாகவும், தமிழக அரசின் மகளிர் நலக்கொள்கை திட்டங்களை ஆதரித்தும், நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அரசு தொடர்ந்திட எங்கள் கழகம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யும். எங்களது பிரச்சாரத்தில் நாங்கள் புதுமாதிரியான யுக்தியை கையாளப்போகிறோம். தி.மு.க அரசு தொடர்ந்து ஆட்சியை மீண்டும் கலைஞர் 6-வது முறையாக அரியணை ஏறிட மக்கள் பாதுகாப்புக் கழகம் இன்று முதல் களப்பணிக்யாற்றிட முடிவு செய்துள்ளது. இவ்வாறு மணி மாறன் கூறினார். பேட்டியின் போது மாநில-மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், சிங்கார சுகுமாறன், பாலா, பழ. சுந்தரி, ராஜன்பாபு-ராஜலட்சுமி, டோமனிக் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.